"தேவேந்தர்சிங்" குடியரசு தலைவர் விருது பெறவில்லை - ஜம்மு காஷ்மீர் காவல்துறை

0 920

ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகளுடன் பிடிபட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தேவேந்தர் சிங்கிற்கு, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் எந்த விருதும் வழங்கப்படவில்லை என்று காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை ஸ்ரீநகரில் 2 பயங்கரவாதிகளுடன் காரில் சென்று கொண்டிருந்த தேவேந்தர்சிங்கை, போலீசார் கைது செய்தனர். டெல்லியில் குடியரசு தினதத்தன்று தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் பயங்கரவாதிகளை அழைத்துச் சென்றதாக உளவுத்துறை கருதும் நிலையில், அதற்கு 12 லட்சம் ரூபாயை அவர் பெற்றிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், ஊடகங்களில் செய்தி வெளியானது போல் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் தேவேந்தர்சிங் குடியரசு தலைவர் விருது பெறவில்லை என்று ஜம்மு காஷ்மீர் காவல்துறை ட்விட்டரில் தெரிவித்துள்ளது. 2018 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநில அரசு சார்பில்தான் துணிச்சலுக்கான விருது வழங்கட்டதாக கூறியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments